இவருக்காக தான் தனிமைப்படுத்திக் கொண்டாரா கனகா?? உண்மையை சொன்ன பிரபலம்
பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் தான் நடிகை கனகா.
கனகா
கரகாட்டக்காரன் படத்தில் நடித்த கனகாவை தமிழ் திரை ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் 80-களின் முக்கிய நாயகியாகினார் கனகா.

அறிமுகமான முதல் படமே அசுர வெற்றி என்பதால் அடுத்தடுத்து தொடர்ந்து பல படவாய்ப்புகள் கனகாவிற்கு குவிந்தது.அதிசய பிறவி,சக்கரை தேவன், சக்திவேல், கோயில் காளை என வரிசையாக தமிழில் வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ள கனகா, ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தனிப்படுத்திக்க....
நடிகை கனகா, 2007 இல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால்,அவர் திருமணம் முடிந்து 15 நாளில் காணவில்லை போனார் என்றும் தகவல்கள் உள்ளது.
அண்மையில் கனகாவை பேட்டி எடுக்க, குட்டி பத்மினி முயன்ற போது வீட்டுக்கு வாசலில் நின்றபோதும் கூட, வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் குட்டி பத்மினியே பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார். இக்கருத்துக்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் வைரலானது.

தனியாக வீட்டினிலேயே வாழ்ந்து வரும் கனகா குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து பேசும் போது, நடிகர் ராமசந்திரன் என்பவரை கனகா காதலித்ததாகவும், ஆனால் ஒரு கட்டத்தில் ராமச்சந்திரனை தவறாக புரிந்து கொண்ட கனகா, போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிறிது காலத்திலேயே ராமசந்திரன் இறந்துவிட,அவரின் காதலை புரிந்து கொண்ட கனகா, மனம் உடைந்து போய் இனி சினிமா வேண்டாம் என முடிவெடுத்து தன்னை தானே சிறை வைத்துக்கொண்டார் என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இது உண்மையா என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    