கனா காணும் காலங்கள் புகழ் நடிகருக்கு 2வது திருமணம்!
Star Vijay
Marriage
Viral Photos
By Sumathi
நடிகர் யுதன் பாலாஜிக்கு 2வது திருமணம் நடைபெற்றுள்ளது.
யுதன் பாலாஜி
விஜய் டிவியில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள்.
இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. அதன்பின் பட்டாளம், காதல் சொல்ல வந்தேன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2வது திருமணம்
மேலும் வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தொடர்ந்து பிரீத்தி என்பவரை யுதன் பாலாஜி காதல் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் யுதன் பாலாஜி சுஜிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.