விஜய்யின் தவெக பிரச்சாரத்தில் சங்கீதா? திருச்சி வருகை!
திருச்சியில் நடைபெறும் பிரச்சாரத்தில் சங்கீதா கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சங்கீதா விஜய்
தவெக தலைவர் விஜய் மனைவி சங்கீதா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் கூட அவரை காணமுடியாத நிலை இருந்தது.
தவெக கட்சியின் மாநாட்டில் கூட அவர் கலந்துகொள்ளவில்லை. கடைசியாக முரசொலி செல்வம் மறைவுக்கு சங்கீதா வந்திருந்தார்.
திருச்சி வருகை
இந்நிலையில் தனது மகனுடன் சென்னை விமான நிலையத்தில் அவர் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
தொடர்ந்து வரும் 13 ஆம் தேதி திருச்சியில் தவெக தலைவர் விஜய் தொடங்கும் பிரச்சாரத்தில் சங்கீதா கலந்து கொள்ள போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.