மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் ராஜினாமா - பகீர் பின்னணி!
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
பேராசிரியர் ஜெ. குமார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் எம்.கிருஷ்ணன். இவரது பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு பதிலாக காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜெ. குமார், கடந்த 2022 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 3 மாதமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
திடீர் ராஜினாமா
ஆனால், இவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறுநிர்ணயம் செய்தல் போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. மேலும், தி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதிலும் சிக்கல்கள் எழுந்து,
ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், ன்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இன்னும் 11 மாத பணிக்காலம் உள்ள சூழலில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.