சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

CM MK Stalin Speech Tamilnadu
By Thahir Jan 25, 2022 06:18 AM GMT
Report

ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக சூரிய சக்தி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன ஆளில்லா விமான கழகத்தை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆளில்லா வான்வழி வாகன கண்காட்சியை தொடங்கிவைத்து வான்வழி வாகன செயல் விளக்கத்தை பார்வையிட்டார்.

கண்காணிப்பு ட்ரான், தொலைதூர கண்காணிப்பு ஆளில்லா விமானம் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் அமைத்த சூரிய மின்சக்தி மையத்தையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.

மேலும், உயர்கல்வித்துறையில் பணியாற்றி உயிரிழந்த குடும்பத்தினர் 34 பேருக்கு பணி நியமன அணையும் வழங்கினார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது.

நான் அரசியல் பேசுவதாக கருதவேண்டாம். ஆராய்ச்சி நிறுவணங்காளாக பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் மட்டும் நமக்கு போதாது என்றும் உயர்கல்வியில், ஆராய்ச்சியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் பெருமளவிற்கு உழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

You May Like This