"காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை" -கமலா ஹாரிஸ்!
காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர் , பாலஸ்தீன போருக்கு அமெரிக்கா துணை நிற்க வேண்டும் . தொடர்ந்து ஈரானுக்கு எதிராக போராடி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக எங்களுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர் ,'' அமெரிக்கா செய்ய வேண்டியது ஆயுத உதவிதான். நீங்கள் ஆயுதங்களை கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
குறிப்பாக ஹமாஸ் சரணடைந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பாத வரை காசாவில் போர் தொடரும்" என்று கூறியிருந்தார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கமலா ஹாரிஸ்
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ்,''தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது.
அதேவேளையில் காசாவில் மக்கள் சந்திக்கும் துயரத்தை பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன்.இந்த விஷயத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. மேலும் காசா விவகாரத்தில் உணர்ச்சியற்றவர்களாக மாற முடியாது என்று தெரிவித்தார்.
நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் கமலா ஹாரிஸ் சந்திப்பு தற்பொழுது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.