அதிபர் தேர்தலுக்கு முன்பே சாதனை படைத்த கமலா ஹாரிஸ்! என்ன தெரியுமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்வானார் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி , 2024 நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் , ஜனநாயக கட்சி சார்பில் முதலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவர் உடல்நிலை காரணமாக போட்டியிடக்கூடாது என்று கோரிக்கை விடப்பட்டது.இதனையே ஏற்று அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார். இந்த சூழலில் வேட்பாளராக கமலா ஹாரிஸ் நிறுத்தப்பட்டார்.
கமலா ஹாரிஸ்
இந்த நிலையில் , புதிய அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்ய உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். இதனை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
இது குறித்து கமலா ஹாரிஸ் எக்ஸ் தளத்தில் பதிவில் தெரிவித்து இருப்பதாவது :
கட்சித் தலைமை தன்னை அதிபர் வேட்பாளராக அறிவித்தது பெருமை அளிப்பதாகவும், அடுத்த வாரம் பரப்புரையை தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.