கமலா ஹாரிசும் தென்னை மரக் காமெடியும் ; இணையத்தைக் கலக்கும் பிரபல மீம் - வைரல் வீடியோ!
கமலா ஹாரிஸ் சொன்ன தென்னை மரக் காமெடி தற்போது வைரலாகி வருகிறது.
தென்னை மரம்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.அதேபோல ஜனநாயக கட்சி வேட்பாளராக பைடன் களம் இறங்கினார்.
ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல் போன்ற சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை ஜோ பைடன் எடுத்தார். தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
வைரல் வீடியோ
இந்நிலையில் கமலா ஹாரிஸ் குறித்த பிரபலமான மீம் ஒன்று தற்போது மீண்டும் டிரண்டாகத் தொடங்கியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் ஹிஸ்பானிக் அமரிக்கர்களின் முன்னேற்றம் குறித்த நிகழ்ச்சி நடந்தது.
அப்போது பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ், 'எனது தாய் சில நேரங்களில் சொல்வதுண்டு, இந்த இளைய தலைமுறை பிள்ளைகளிடம் என்ன தவறு என்று எனக்குத் தெரியவில்லை, நீங்கள் எல்லோரும் எதோ தென்னை மரத்தில் இருந்து நேராக பூமியில் விழுந்தவர்கள் என்று நினைக்கிறீர்களா?
“You think you just fell out of a coconut tree? You exist in the context of all in which you live and what came before you” - Kamala Harris (2023)pic.twitter.com/GiTVhDNvRd https://t.co/SXmwKAKhke
— Fiona Small (@FionaSmall) May 17, 2024
என்று அவர் கேட்பதுண்டு' என்று சொல்லிவிட்டு சிரித்தார் கமலா ஹாரிஸ். அவர் பேசிய அந்த வீடியோ டிரண்ட் ஆன நிலையில் கமலா ஹாரிஸ் கொகநட் மர மீம்கள் இணையத்தில் உலா வரத் தொடங்கின. தற்போது கமலா அதிபர் வேட்பாளராகியுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இந்த மீமீக்களை பிரச்சார ஆயுதமாகியுள்ளனர்.