தான் எடுத்துக்கொண்ட பொறுப்பு; செய்துக்காட்டியவர் உதயநிதி - கமல்ஹாசன், வைரமுத்து வாழ்த்து!

Kamal Haasan Udhayanidhi Stalin Vairamuthu
By Sumathi Nov 27, 2023 04:44 AM GMT
Report

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்

திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

udhayanithi stalin birthday wishes

தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், திரைபிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

குவியும் வாழ்த்து 

அந்த வகையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி. தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும்,

மேலும் கவிஞர் வைரமுத்து தெளிவாய் உள்ளது கொள்கை திடமாய் உள்ளது இயக்கம் ஒளியாய் உள்ளது பாதை உழைப்பதுதான் உன் வேலை பின்னோரை முன்னேற்ற முன்னோரைப் பின்பற்று உதயநிதிக்கு இதய வாழ்த்து எனக் குறிப்பிட்டுள்ளார்.