சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK Narendra Modi
By Jiyath Sep 09, 2023 09:35 AM GMT
Report

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

ஜி20 உச்சி மாநாடு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! | Minister Udayanidhi Stalin Abou Sanatana

மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் அமர்ந்துள்ள பகுதிக்கு முன்பும் அந்நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு முன் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என பெயர்ப்பலகை வைக்கப்பட்டிருந்தது தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி

அந்த வகையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில் "இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, அதை 'பாரத்' என மாற்றிவிட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள்' என்று பேசினார்.

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! | Minister Udayanidhi Stalin Abou Sanatana

மேலும் சனாதன விவகாரம் குறித்து பேசிய உதயநிதி "சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை ஒழிப்பது குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன்? சனாதனம் பற்றி பேசிய அண்ணா பெயரில் உள்ள கட்சியான அ.தி.மு.க.வின் கருத்தை நான் அறிய விரும்புகிறேன்" என்று பேசியுள்ளார்.