காங்கிரஸ் தொகுதியில் களமிறங்கும் கமல் - கை சின்னத்தில் போட்டியா..?
ம.நீ.ம கட்சி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடத்தில் தேர்தலில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற பிரதான கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இதன் காரணமாக தொகுதி பங்கீட்டில் கூட்டணியில் சலசலப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியவண்ணம் இருக்கின்றன. ஆனால், இன்னும் இறுதியான தொகுதி பங்கீடு குறித்து தகவல் வெளியாகவில்லை.
ம.நீ.ம நிலை
இந்த தேர்தலில் திமுக தலைமையிடம் நெருக்கம் காட்டி வரும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறும் என்று கூறப்படும் நிலையிலும், காங்கிரஸ் தலைமையும் மக்கள் நீதி மய்யத்துடன் நெருக்கம் காட்டி வருகின்றது.
இந்நிலையில் தான் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் ஒன்றல்லது இரண்டில் ம.நீ.ம போட்டியிடும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் திரும்பிய பிறகு, கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், கை சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கவும் காங்கிரஸ் கட்சி பேசிவருவதாக கூறப்படுகிறது.
கோவை மற்றும் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதி போன்றவற்றை மக்கள் நீதி மய்யம் குறிவைப்பதாக தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.