நான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன்: ஸ்டாலினை சீண்டும் கமல்ஹாசன்

kamal dmk mnm
By Jon Mar 07, 2021 03:56 PM GMT
Report

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் நாய் ஜாக்கிரதை என்று போர்டு வைப்பதுபோல எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வாசலில் போர்டு வையுங்கள் என்றார்.


  தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் நம்முடைய எதிர்காலம் இருண்டு போய் கிடக்கிறது .பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறுகிறார்கள் . மக்களிடம் அதிக பணத்தை வசூலிக்கிறார்கள். தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் . நான் கூகுள் செய்து பார்த்தேன் .

பிறகுதான் தெரிகிறது எத்தியோப்பியா நாட்டில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்றார். திமுக குறித்து பேசிய கமல்ஹாசன் மு க.ஸ்டாலின், நிற்கும் இடத்தில் நான் நிற்க மாட்டேன் .

நான் கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்கப் போகிறேன் . திமுகவை அகற்ற வேண்டிய காலம் இது ,திமுக அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.