நான் தாத்தா ஆகியிருப்பேன் - ஸ்ருதி நினைச்சிருந்தா? வெளிப்படையாக கேட்ட கமல்

Kamal Haasan Shruti Haasan
By Karthick Jun 02, 2024 07:23 AM GMT
Report

நடிகர் கமல் நடிப்பில் வெளிவரவுள்ள இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஸ்ருதி ஹாசன்

கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் சூர்யாவுடன் "7-ஆம் அறிவு" படத்தில் அறிமுகமாகினர். அப்படம் கொடுத்த வெற்றி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நாயகியாக முன்னேறினார் ஸ்ருதி ஹாசன்.

Shruthi Haasan

தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் என அநேக நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், திடீரென சிலகாலம் படங்களில் இருந்து ஒதுங்கினார்.

Shruthi Haasan

தனது பாடல் ஆர்வத்தின் காரணமாக இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய அவர், அண்மையில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த "சலார்" படத்தில் நடித்திருந்தார். அதே போல, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்த "இனிமேல்" ஆல்பம் பாடலிலும் நடித்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.

Shruthi Haasan

தற்போது இவர் கே.ஜி.எஃப் நாயகன் யாஷ் அடுத்த படமான "டாக்ஸிக்" படத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினியின் "கூலி" படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பருடன் பிரேக் அப் செய்து விட்டார் என்ற செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

நா சிங்கள் தான் - ஆனால் அதுக்கு இப்பவும் ரெடி தான் - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன்

தாத்தா 

நேற்று நடைபெற்ற இந்தியன் 2 பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கமலிடம் தொகுப்பாளரான சிவா, "இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல விரும்புகிறார்" எனக் கேட்டார்.

Shruthi Haasan Kamal Haasan

அதற்கு பதிலளித்த கமல், சொல்லிட்டாரு, இப்போ தான் சொன்னது தான். என் மகள் ஸ்ருதி ஹாசன் மனசு வைத்திருந்தால் நான் இப்பவே தாத்தா தான்" என மகள் திருமணம் குறித்து பேசியிருந்தார். அதற்கு கீழே அமர்ந்திருந்த ஸ்ருதி ஹாசன், வேண்டாம் என தலையசைத்தார்.