அந்த நடிகை என் காதலிதான்; கல்யாணம் நடக்காமல் போனதே இதனால் தான் - கமல் பளீச்!
நடிகை ஸ்ரீ வித்யா குறித்து கமல்ஹாசன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ரீவித்யா
80ஸ், 90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பல நடிகைகளுக்கு அம்மாவாகவும் குணசத்திரா வேடங்களிலும் நடித்துள்ளார்.
பின் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஸ்ரீ வித்யா கேரளாவுக்கு சென்றிருந்த நிலையில் தனது இறுதி நாட்களை வாழ்ந்து உயிரிழந்தார். இதற்கிடையில், சார்ஜ் என்பவரை திருமணம் செய்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார்.
கமலுடன் காதல்
இந்நிலையில், பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிச்சேன். அப்போ அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியது ஸ்ரீவித்யா தான். அவங்க எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும்தான் அதில் எந்த சந்தேகமும் இல்ல.
அந்த படம் மூலமாக எங்களுக்கு ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது. அது கல்யாணத்தில் முடியனும் என்றெல்லாம் அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஸ்ரீவித்யா அளித்திருந்த பேட்டி ஒன்றில், நானும் கமல்ஹாசனும் காதலித்த விஷயம் சினிமா இண்டஸ்ட்ரியில் எல்லாருக்கும் தெரியும்.
என்னுடைய அம்மா கமல்ஹாசனிடம் நீங்க ரெண்டு பேருமே நல்ல நடிகர்கள் இருவரும் இந்த நேரத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுடைய வாழ்க்கை கெட்டுப் போய்விடும் என்று பேசினார். அதனால் கோபப்பட்டு கமல்ஹாசன் போய்விட்டார் என்னிடமும் கொஞ்ச நாளைக்கு பேசவே இல்லை.
அந்த நேரத்தில் தான் திடீரென அவருக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற செய்தி எனக்கு வந்தது. அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு இருவரும் அப்படியே நாங்கள் பிரிந்து விட்டோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.