உடல்நலக்குறைவு: கமல்ஹாசன் நலமாக உள்ளார் - மருத்துவமனை தகவல்!

Kamal Haasan Cold Fever Tamil Cinema Makkal Needhi Maiam
By Sumathi Nov 24, 2022 03:58 AM GMT
Report

உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக்குறைவு

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார்.

உடல்நலக்குறைவு: கமல்ஹாசன் நலமாக உள்ளார் - மருத்துவமனை தகவல்! | Kamal Haasan Returned Home From The Hospital

மேலும் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், காய்ச்சலின் காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் அவர் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.