திமுக கூட்டணிக்கு வர கமல்ஹாசன் ரெடி - செல்வபெருந்தகை பரபர பேச்சு!
கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வர தயாராக இருப்பதாக செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
செல்வபெருந்தகை
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ராகுல் காந்தி தன் சொந்த அண்ணன் போல கருதுகிறார். இந்த கூட்டணி இயற்கையானதாக அமைந்துள்ளது எனவே
கமல்ஹாசனுடம் தனி கூட்டணிக்கு எண்ணம் இல்லை. தமிழக முதலமைச்சர் தூக்கம் இல்லாமல் தமிழக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார் இதனை பார்க்கக்கூடிய எதிரணியினர் திமுக கூட்டணிக்கு வர தயாராக உள்ளனர்.
கமல்ஹாசன் தயார்
அந்த வகையில் கமல்ஹாசனும் கூட்டணிக்கு வர தயாராக இருப்பார். கமல்ஹாசன் சனாதானவாதிகளை எதிர்க்கக் கூடியவராக தான் திகழ்ந்து வருகிறார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமுதாயமாகத்தான் இருக்க வேண்டும் என்பது கமலஹாசன் நிலைப்பாடாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நடை பயணத்தில் கமல்ஹாசன் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.