கமல் என்னிடம் வெறி பிடித்ததுப்போல் நடந்துக்கொள்வார் - ஓபனாக சொன்ன முன்னாள் மனைவி!
கமல் வெறிப்பிடித்த மணிதரைப்போல் நடந்துக்கொள்வார் என முன்னாள் மனைவி கூறியுள்ளார்.
கமல்ஹாசன்
தமிழ் திரை உலகில் பன்முகத்திறமைக் கொண்டவர்கள் பலர் இருந்தாலும், பலரிலும் தனித்து மேலோங்கி இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன், தமிழ் சினிமா வரலாற்றின் ஒப்பற்ற கலைஞன், ஈடு-இணையற்றவர் என்ற பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், கதை, திரைக்கதை,வசனம், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை ஒருங்கே கொண்ட திரையுலக நாயகன் கமல்ஹாசன். கமல் ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
தற்போது அவர் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் கமலின் முதல் மனைவி வாணி கணபதி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் விவாகரத்து பெற்று 28 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நான் இதுகுறித்து எப்போதுமே பொதுவெளியில் பேசியதே இல்லை. ஏனென்றால் இது ரொம்பவே தனிப்பட்ட விஷயம் என்று எனக்கு தெரியும். ஆனால் நாங்கள் இரண்டு பேரும் இப்போது பிரிந்துவிட்டோம். இருந்தாலும் கமல் மட்டும் ஏன் வெறி பிடித்த மனிதரை போல் நடந்துகொள்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.
முன்னாள் மனைவி
நாங்கள் பகிர்ந்துகொண்ட குடியிருப்பிலிருந்து நாங்கள் பயன்படுத்திய உபகரணங்களைக்கூட எனக்கு கொடுக்க அவர் மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம் நான் எதை எதிர்பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.
உலகத்தில் எந்த நீதிமன்றமன்றத்தில் ஜீவனாம்சம் ஒருவரை திவாலாக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை படித்ததும் நான் அதிர்ச்சிதான் அடைந்தேன். நான் திருமணத்திலிருந்து வெளியேறியபோது அவரது ஈகோ கண்டிப்பாக காயப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு பிறகுதான் இவ்வளவும் நடந்திருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டி சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலான நிலையில் கமல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.