'ரோபோ' படத்திலிருந்து விலகல்; பிரச்சனையே இதுதான் - கமல்ஹாசன் விளக்கம்!
'ரோபோ' படத்திலிருந்து விலகியது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கமல்ஹாசன்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. நடிகை ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த இந்த படத்தை ரசிகர்கள் அப்போது கொண்டாடி தீர்த்தனர்.

எந்திரன் படத்தில் முதலில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. ‘ரோபோ’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் ப்ரீத்தி ஜிந்தா நாயகியாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் கமல்ஹாசன் படத்திலிருந்து விலகினார்.
விலகியது ஏன்?
இந்நிலையில் 'ரோபோ' படத்திலிருந்து விலகியது குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது "அந்தப் படத்தில் நடிக்க, ஷங்கர் என்னை அணுகினார். ஆனால், எனது கால்ஷீட், அப்போதைய மார்க்கெட் நிலவரம்,

சம்பளம் போன்ற வணிகப் பிரச்சினைகளால் நான் விலக நேரிட்டது. இதையடுத்து அந்த படத்தை ஷங்கர் விட்டு விடுவார் என்று நினைத்தேன். ஆனால் சரியான நேரத்தில் ரஜினியை வைத்து எடுத்து வெற்றிபெற்றார்" என்று தெரிவித்துள்ளார்.
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan