பத்தல பத்தல பாடலை அப்படியே கமல் பாணியில் பாடிய திருமூர்த்தி - நேரில் வாழ்த்திய கமல்..!
விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலை அப்படியே கமல் பாணியில் பாடிய திருமூர்த்தியை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு ஏ.ஆர்.ரகுமானிடம் இசை கற்று கொள்வதற்கான முழுச்செலவையும் ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விக்ரம் திரைப்படம்
கமல்ஹாசன், ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி மாஸ் காட்டிய திரைப்படமான விக்ரம் படம் வெளியாகும் முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சிங்கிள் மே 11 அன்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தை மாஸ்டர் புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
'பாதலா பாதலா', ஒரு வேடிக்கை நிறைந்த பாடல், நடிகரின் முந்தைய பாடல்களான 'கந்தசாமி மாடசாமி' மற்றும் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா' போன்றவற்றை நினைவூட்டது.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 'அன்பே சிவம்' உட்பட பல பிரபலமான பாடல்களை கமல் பாடியுள்ளார்.
விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலை நடிகர் கமல் பாடியிருந்தார்.அந்த பாடல் மிகவும் மக்களை கவர்ந்தது. இந்த பாடலில் இடம் பெற்ற “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்லே இப்பாலே” எனும் வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் அமைந்து இருப்பதாகக் கூறி அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை கிளப்பியிருந்தது.
வாழ்த்திய கமல்
இந்நிலையில் அந்த பாடலை அப்படியே கமல் தோணியில் பாடியிருந்தார் திருமூர்த்தி. இதையடுத்து திருமூர்த்தி பாடிய வீடியோ வைரலானது.
இதையடுத்து திருமூர்த்தியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த கமல். அவரை அதோடு அவரது இசை கற்றுக்கொள்வதற்கான முழுச்செலவையும் ஏற்று கொண்டார்.