‘பத்தல பத்தல’ - வெளியானது விக்ரம் படத்தின் முதல் பாடல்!

Kamal Haasan Vijay Sethupathi Lokesh Kanagaraj
3 மாதங்கள் முன்

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடி எடுத்து வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

முதல் படமே வெற்றி பெற்றதால் அடுத்ததாக கார்த்தியுடன் கைதி படத்தை இய்யகினார். அதுவும் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் உருவெடுத்தார்.

‘பத்தல பத்தல’ - வெளியானது விக்ரம் படத்தின் முதல் பாடல்! | First Single From Kamal Hasan Vikram Film Released

தனது 3-வது படத்திலேயே தளபதி விஜய்யுடன் கைக்கோர்த்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் 2020-ம் ஆண்டு கமல் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பெரும் வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்களில் ஒன்றான ‘விக்ரம்’ உலகம் முழுக்க வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.

‘பத்தல பத்தல’ - வெளியானது விக்ரம் படத்தின் முதல் பாடல்! | First Single From Kamal Hasan Vikram Film Released

இந்நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லரை வரும் மே 15-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.இதனை தொடர்ந்து தற்போது படத்திற்கான முதல் பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி ‘பத்தல பத்தல’ பாடலின் போஸ்டரை இன்று வெளியிட்ட படக்குழு தற்போது கமல் குரலில் பாடியுள்ள பத்தல பத்தல பாடலை ரிலீஸ் செய்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.