’கமல் அழைத்தாலும் அவர் கட்சியில் இணைய மாட்டேன்’ நடிகர் ஆதி

actor kamal political Aadhi
By Jon Mar 12, 2021 01:29 PM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் சொந்தமாக கட்சி ஆரம்பித்து தற்போது முதல்வர் வேட்பாளராக ஒரு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கிறார். பல்வேறு நடிகர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஒன்றும் புதியதல்ல. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட நடிகர் ஆதி.

அப்போது பேசிய அவர், “நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை” என்றார். கமல்ஹாசன் அழைத்தால் அரசியலுக்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் ஆதி, “நான் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். கமல் அழைத்தாலும் அவரின் கட்சிக்கு செல்ல மாட்டேன்.

தற்போது மக்கள் விழிப்புடன் உள்ளனர் நல்லது செய்பவர்களை மக்கள் ஆதரிப்பார்கள்” என்றார். மேலும் பேசிய அவர், அரசியலுக்கு சினிமாத்துறையினர் வரக்கூடாது என்பதில்லை. சேவை செய்ய எந்த துறையினரும் அரசியலுக்கு வரலாம் என்றார்.