கள்ளக்குறிச்சி விவகாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று முன்தினம் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி விசாரணை
மேலும் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
,முதலமைச்சருடனான காணொலி கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்