கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை ஒப்படைக்க உத்தரவு - வெளியாகுமா பின்னணி
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் செயல்பட்டு வந்த , சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில்,

இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள்,
நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க அவரது தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.