3மணி நேர மறுஉடற்கூராய்வு...உடலை வாங்க மறுத்த பெற்றோர் - நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்!

Tamil nadu K. Chandrashekar Rao Kallakurichi
By Sumathi Jul 20, 2022 06:51 AM GMT
Report

மறு கூறாய்வு முடிந்த பின்னர், மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மறு உடற்கூராய்வு

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு மாணவியின் தந்தை செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று மறு உடல்கூராய்வு செய்யப்பட்டது.

3மணி நேர மறுஉடற்கூராய்வு...உடலை வாங்க மறுத்த பெற்றோர் - நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்! | Kallakurichi Student Body Re Postmortem

அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

உடல்கூராய்வு  நிறைவு

மறுஉடற்கூராய்வுக்கு தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று திடீரென நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது என்றும், மாணவியின் உடற்கூறாய்வை நடத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர்.

3மணி நேர மறுஉடற்கூராய்வு...உடலை வாங்க மறுத்த பெற்றோர் - நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்! | Kallakurichi Student Body Re Postmortem

இதனையடுத்து பெற்றோர் இல்லாமலேயே 3மணி நேரம் மறு உடல் கூறாய்வு நடைபெற்றது. இரவு உடல் கூறாய்வு முடிந்த பின்னர் மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

யாரும் ஆஜராகவில்லை 

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மறு கூராய்வு முடிந்த உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. திருவண்ணாமலை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு ஆய்வாளர் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்

மறுபிரேத பரிசோதனை நடத்தப்படும் என வட்டாட்சியர் மூலமும் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கேசவன் என்பவருக்கும், தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாங்கள் ஆஜராகவில்லை.

நோட்டீஸ்

மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌ பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. 

உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும் படி குற்ற பிரிவு குற்றப்புலனாய்வு துறை சார்பில் உயிரிழந்த மாணவியின் வீட்டில் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஜய பிரபாகரன் நோட்டீஸ் ஒட்டினார்.