கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம் - கைதான 173 பேருக்கு காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு
மாணவி மரண வழக்கு
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜுலை 17ம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.
இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பாக பெற்றோர் நீதிமன்றத்தில் மாணவியின் உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் குழுவை ஒன்றை நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் உடலை நல்லடக்கம் செய்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல் நீட்டிப்பு
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் கலவரம் தொடர்பாக கைதான 173 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.