கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்..மாணவியின் தாய்மாமா அதிரடி கைது!

Tamil nadu Kallakurichi School Death
By Swetha Sep 25, 2024 01:30 PM GMT
Report

மாணவி மரண வழக்கில் அவரது தாய்மாமாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாய்மாமா 

கள்ளக்குறிச்சியில் ஜுலை17 ஆம் தேதி கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து மாணவியின் மரணம் தொடர்பாக

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்..மாணவியின் தாய்மாமா அதிரடி கைது! | Kallakurichi School Girls Uncle Got Arrested

பெற்றோர் நீதிமன்றத்தில் மாணவியின் உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் குழுவை ஒன்றை நியமித்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்

மாணவி ஸ்ரீமதி வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன்

அதிரடி கைது

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. பின்னர் மாணவியின் உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் உடலை நல்லடக்கம் செய்தனர். மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் திடீர் திருப்பம்..மாணவியின் தாய்மாமா அதிரடி கைது! | Kallakurichi School Girls Uncle Got Arrested

இந்த நிலையில், மாணவியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால் அவரை கைது செய்து கள்ளகுறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.