தீர்த்தத்தில் விஷம் கலந்த அர்ச்சகர்; 5 பேர் கவலைக்கிடம் - பின்னணி என்ன?
5 பேரை கொலை செய்ய முயன்ற அர்ச்சகரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ச்சகர் செயல்
கள்ளக்குறிச்சி, அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி. இவர் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
வீட்டு அருகிலேயே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டி ஜோசியம் பார்ப்பது, குறி சொல்வது உள்ளிட்ட பல செயல்களை செய்து வந்துள்ளார். முரளிக்கு உதவியாளராக கணேசனின் சொந்தக்கார பையன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.
தீவிர விசாரணை
சமீபத்தில் பல இடங்களில் கடன் வாங்கி கோவிலில் திருவிழாவை நடத்தியுள்ளார். ஆனால் கடனை திரும்ப கட்டாததால் அவரை கடன் கொடுத்தவர்கள் மிரட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் குடும்பத்தினர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது சானிட்டசைரை தீர்த்தத்தில் கலந்து அனைவருக்கும் முரளி குடிக்கக் கொடுத்துள்ளார்.
பின் தானும் குடித்துள்ளார். இதனால் சிறிது நேரத்தில் எல்லாரும் மயங்கி விழுந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேரிடமும் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.