பிரசவத்தின் போது ஏற்பட்ட அதிக ரத்த போக்கு..துடிதுடித்து உயிரிழந்த பெண் மருத்துவர்-பயங்கர சம்பவம்!
பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மருத்துவர்
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கபீர் -ஷீஜா தம்பதியினர். இவர்களுக்கு பாத்திமா என்ற மகள் உள்ளார். இவர் திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு முதுகலை மருத்துவமான எம்டி படித்து வருகிறார்.
இந்த சூழலில் பாத்திமாவுக்கும் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சனுஜ் என்பவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் 2வது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை பாத்திமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரசவலி
அப்போது திடீரென பிரசவலி ஏற்பட்டுள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டதால் பாத்திமாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் பாத்திமாவுக்கு பிறந்த குழந்தை முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.