கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை -விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
கழிவறை தொட்டியில் பிறந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் பெங்களூரு-கனகபுரா சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த நவம்பர் 27ம் தேதி கழிவறையில் தண்ணீர் தேங்கியது.
இதனைச் சுத்தம் செய்யத் துப்புரவுப் பணியாளர், கழிவறை தொட்டியில் பிறந்த ஆண் குழந்தை சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
முதற்கட்ட விசாரணையில், நேபாளத்தைச் சேர்ந்த சுரேந்திர மெக்ரா என்ற இளைஞரும், அம்ருதா குமாரி என்ற இளம் பெண்ணும் பெங்களூரூவில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிந்து வந்துள்ளனர்.இவர்களுக்குப் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளனர்.
குழந்தை சடலம்
இந்த நிலையில், கடந்த மாதம்,அம்ருதா குமாரிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது அவர் 8 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலையில் கடந்த நவ., 24 ஆம் தேதி, அம்ருதா குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.அப்போது, அம்ருதா குமாரி கழிவறைக்குச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக குழந்தையை கழிப்பறை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம், தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சுரேந்திர மெக்ரா மற்றும் அம்ருதா குமாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.