மனைவியின் தொல்லை..தாங்க முடியாமல் கிரிகெட் வீரர் எடுத்த வீபரித முடிவு - பகீர் தகவல்!
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் கிரிகெட் வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி தொல்லை
பெங்களூரில் வசித்து வந்தவர் பாலராஜ் . இவர் உள்ளூர் கிரிக்கெட் வீரராக உள்ளார். இவரது மனைவி குமாரி . இந்த தம்பதிக்குக் கடந்த 18 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில் குமாரிக்கு வேறு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் பாலராஜுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாலராஜுக்கு தொடர்ந்து குமாரி தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மேலும் கணவருடன் வாழப் பிடிக்காமல் குமாரி பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த பாலராஜ் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல் துறையினர் பாலராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பாலராஜ் எழுதிய கடிதம் கிடைத்தது.
தற்கொலை
அதில், மனைவி தொல்லை மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாகவும், தான் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால், கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசு கோப்பைகள், உடலுடன் வைத்து இறுதிச்சடங்கு செய்யும்படி பாலராஜ் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.