கள்ளக்குறிச்சி கலவரமாக மாற இது தான் காரணம் : உளவுத்துறை சொன்ன அதிர்ச்சி தகவல்

By Irumporai Jul 17, 2022 08:46 AM GMT
Report

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் கலவரமாக மாறியது.

கலவரமான போராட்டம்

இந்த கலவரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலதுறையினர் சிலர் காயமடைந்தனர். மேலும் , போரட்டக்காரர்கள் சிலர் காவல் துறையின் வகனங்களை தாக்கினர்.

கள்ளக்குறிச்சி கலவரமாக மாற இது தான் காரணம்  : உளவுத்துறை சொன்ன அதிர்ச்சி தகவல் | Kallakurichi Issue Whatsapp Protest

அதே சமயம் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர், பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

காவல்துறை துப்பாக்கிசூடு

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த நிலையில் போரட்டம் களவறமாக மாறியது எப்படி என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் கள்ளக்குறிச்சி வன்முறை - வாட்ஸ் அப் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்பில் திரண்ட போராட்டக் குழு

ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு போராட்டம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு அமைத்து திரண்ட போராட்டக்காரர்கள் ஒரே நாளில் 500 பேர் வாட்ஸ் அப் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பதட்டமான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். பள்ளி மாணவி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தவறு நிகழ்ந்திருந்தால் பள்ளி நிர்வாகம் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.