விஷச்சாராயம் - 35 பலி; சட்டவிரோத மதுபானங்களை தடுப்பதில் குறைபாடு..ஆளுநர் ரவி ஆவேசம்!

R. N. Ravi Governor of Tamil Nadu Death Kallakurichi
By Swetha Jun 20, 2024 05:17 AM GMT
Report

கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஷச்சாராய

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விஷச்சாராயம் - 35 பலி; சட்டவிரோத மதுபானங்களை தடுப்பதில் குறைபாடு..ஆளுநர் ரவி ஆவேசம்! | Kallakurichi Illegal Liquor Governor Ravi Condemns

தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி - கள்ளக்குறிச்சி விரையும் எடப்பாடி பழனிசாமி!

கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் பலி - கள்ளக்குறிச்சி விரையும் எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் ரவி

இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

விஷச்சாராயம் - 35 பலி; சட்டவிரோத மதுபானங்களை தடுப்பதில் குறைபாடு..ஆளுநர் ரவி ஆவேசம்! | Kallakurichi Illegal Liquor Governor Ravi Condemns

மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அவ்வப்போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த செய்திகள் வெளிவருகின்றன. சட்டவிரோத மதுபான தயாரிப்பு, நுகர்வை தடுப்பதில் உள்ள குறைபாட்டை இது பிரதிபலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.