கள்ளக்குறிச்சு விவகாரம்; சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்!

Tamil nadu Chennai Kallakurichi School Death Kallakurichi
By Swetha May 23, 2024 04:50 AM GMT
Report

சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சு மாணவி ஸ்ரீமதியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர்  

யூடியூப் தளங்களில் அரசியல் கருத்துக்களை பேசி பெரும் பிரபலமான சவுக்கு சங்கர், பெண் காவலர்களை குறித்து தவறாக பேசி காரணத்தால், கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கஞ்சா வழக்கும் பதியப்பட்டது.

கள்ளக்குறிச்சு விவகாரம்; சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்! | Kallakurichi Girls Mom Files Case Savukku Sankar

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி விடுதியில் மர்மமாக உயிரிழந்த கடலூர் மாணவியின் தாயார் செல்வி, சவுக்கு சங்கர் சவுக்கு சங்கர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சவுக்கு சங்கர் - அண்ணாமலை போன் ரெக்கார்ட் எடுங்க - கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

சவுக்கு சங்கர் - அண்ணாமலை போன் ரெக்கார்ட் எடுங்க - கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

தாயார் புகார்

அவர் அளித்த புகாரில், " சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலில் கடந்த 20.7.2022 அன்று 'கள்ளக்குறிச்சி விவகாரம், மர்மம் அவிழ்க்கும் சவுக்கு' என்ற தலைப்பில் சவுக்கு சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் எனது மகள் குறித்தும், என்னை பற்றியும், குடும்பத்தினர் பற்றியும் உண்மைக்கு புறம்பான ஆதாரமற்ற செய்திகளை சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சு விவகாரம்; சவுக்கு சங்கர் மீது மாணவி ஸ்ரீமதியின் தாயார் புகார்! | Kallakurichi Girls Mom Files Case Savukku Sankar

அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார் என்று தெரிந்தபோதும் தகுந்த ஆதாரம் அப்போது என்னிடம் இல்லை. இந்த நிலையில் சவுக்கு சங்கரிடம் உதவியாளராக இருந்த பிரதீப் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சவுக்கு சங்கர் பணம் பெற்றுதான் இப்படி பேசினார் என்று கூறியுள்ளார்.

எனவே, இந்த புகாரை ஆதாரமாக வைத்து சவுக்கு சங்கர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.