சவுக்கு சங்கர் கைது: பிரபல யூடியூப் சேனலுக்கு சிக்கல் - போலீசார் அதிரடி!
சவுக்கு சங்கரின் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சவுக்கு சங்கர்
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்குப்பதிவு
இதனையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் நள்ளிரவில் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் போலீசார் குறித்து அவதூறாக பேசிய பேட்டியை வெளியிட்ட பிரபல யூடியூப் சேனல் மீதும் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பின் வாசலால் சென்ற தமிழரசுக்கட்சி: அநுரவிடம் கேட்டது இதைத் தான்..! அம்பலப்படுத்திய தமிழ் எம்.பி IBC Tamil