கள்ளச்சாராய விவகாரம்; தொடரும் மரண ஓலம் - பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளச்சாராய விவகாரம்
சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சிகிச்சை பெற்ற 80க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்த விவகாரத்தில், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சை பெறும் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்த விவகாரத்தில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய புகாரில் குற்றப்பின்னணி உடையவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி கைது செய்து வருகின்றனர்.
விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.எஸ்.பி. கோமதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
ஆனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.