கலவரங்களால் தொடர் மாற்றம் - தற்போது கள்ளக்குறிச்சி ஆட்சியர் யார் தெரியுமா?
கள்ளக்குறிச்சி நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. 2019 ஜனவரி 8 ஆம் தேதியன்று 33 வது மாவட்டமாக விழுப்புரத்திலிருந்து பிரித்து அறிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
2 வருவாய் கோட்டங்களையும், 7 வட்டங்களையும், 562 வருவாய் கிராமங்களையும் மற்றும் 24 குறுவட்டங்களையும் உள்ளடக்கியது. இம்மாவட்டத்தில் 412 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதன் அருகில் சேலம், திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.
இதன் முதல் மாவட்ட ஆட்சியராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார். முன்னதாக தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல பாதுகாப்பு துறை இணைச் செயலாளராக இருந்தார். ஒன்றரை ஆண்டுகள் பணியில் இருந்த இவர் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டார்.
வெடித்த கலவரங்கள்
அவருக்குப் பின் மாவட்டத்தின் 2-வது கலெக்டராக பி.என்.ஸ்ரீதர் பொறுப்பேற்றார். முதலாவதாக பணிபுரிந்து வந்த கிரண்குராலா தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் ேதர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த பி.என்.ஸ்ரீதர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராகவும் இடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டது.
அப்போது கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. கொரோனா தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கைகளான தடுப்பூசி, ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து முக்கியத்துவம் வழங்கினார்.
பி.என்.ஸ்ரீதர் ஐதரபாத்தைச் சேர்ந்தவர். திண்டிவனத்தில் சப்-கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தார். சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை ஆணையாளராக 2½ ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆட்சியர்கள் மாற்றம்
மேலும், அந்த சமயத்தில் சின்னசேலத்தை அடுத்த கணியாமூர் கிராமத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது கொலை என்றும், அதற்கு நீதி வேண்டும் என்றும் கூறி பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தக் கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.
அந்த கலவரத்தின் எதிரொலியாக ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், ஸ்வரன் குமார் ஜடாவத் அவர்களின் உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணமல்ல, அப்படியான மருத்துவ அறிக்கையை மருத்துவர்கள் கொடுக்கவில்லை என தெரிவித்தார். எனவே, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உயிரிழப்புக்கு சென்றவர்களும் அங்கு விநியோகம் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து உயிரிழந்தனர்.
இவ்வளவு உயிரிழப்புக்கு காரணம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஸ்வரன்குமார் ஜடாவத் அளித்த தவறான பேட்டியே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்வரன் குமார் ஜடாவத் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின் மாவட்ட புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் தற்போது பணியில் உள்ளார். கள்ளச்சாரய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனே 11 வருவாய் வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.