கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: அபிராமியின் சர்ச்சை கருத்துக்கு கொதித்தெழுந்த சின்மயி!
கலாஷேத்ரா குறித்த பாலியல் விவகாரத்தில் அபிராமியின் கருத்துக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.
அபிராமி கருத்து
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதன் அடிப்படையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ’எப்போதும் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு முடிவு எடுக்கக் கூடாது என்றும் 89 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில் நானும் படித்திருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பின் கருத்தையும் கேட்க வேண்டும்.
சின்மயி பதிலடி
கலாஷேத்ரா என்ற பெயரை சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள் கூட இது பற்றி பேசுவது வருத்தமாக இருக்கிறது. கலாஷேத்ரா புகழை கெடுக்கும் செயல் தான் இது. இந்த விஷயத்தில் கலாஷேத்ரா ரேவதி மேடத்திற்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன். பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்த ஒரு குற்றச்சாட்டு ஆக இருந்தாலும் உடனடியாக அதை வெளியே தெரிவிக்க வேண்டும் என்றும் பல வருடங்கள் கழித்து நன்றாக வளர்ந்து விட்டு அதன்பின் குற்றம் சொல்லக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
என்ன லாஜிக் இது.. இத்தன வருஷம் நடக்கலைன்னா இப்ப நடந்திருக்காதா.. அதென்னங்க மேடம்… ‘யார் யாரோ’ ‘ காலாக்ஷேத்ரா னு வாயில வராதவங்களாம்’ பேசறாங்கலாம்.. ஏன் வாயில வந்தா தான் பேசனுமா…??? So இவாளுக்கு நடந்த தப்பு பெருசு இல்ல.. so called ‘ யார் யாரோ’ பேசறது தான் பிரச்சனையாம்.. pic.twitter.com/9Kvb3PnEnx
— MooknayakDr (@sathisshzdoc) April 4, 2023
இதற்கு பதிலளித்த பாடகி சின்மயி, உண்மையை எப்போது சொன்னாலும் அது உண்மைதான், நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஒரு உண்மை பொய்யாக விடாது. தனக்கு நடந்த பாலியல் தொல்லை போலவே பிரபல ஹாலிவுட் நடிகை லேடி காகாவுக்கு நடந்தது. அவர் பல ஆண்டுகள் கழித்து தான் அதை வெளியே சொல்லியிருந்தார் எனக் கூறியுள்ளார்.