வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும் - சின்மயி

cinema
By Nandhini Jun 01, 2021 05:17 AM GMT
Report

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட இருந்த ஓஎன்வி விருதை கேரளாவின் வுமன் சினிமா கலெக்ட்டிவ் அமைப்பினர் எதிர்த்தார்கள். நடிகைகள் பார்வதி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால், விருது மறுபரிசீலனை செய்யப்படும் ஓஎன்வி அகாடமி அறிவித்தது. தராத விருதை திருப்பி தருகிறேன் என்றும், தராத பணத்தையும் திருப்பி கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தருவதாக கூறினார் வைரமுத்து. இதற்கு கமெண்ட் செய்து வைரமுத்துவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார் பாடகி சின்மயி.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்காக மட்டுமல்ல, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் குரல் கொடுத்து வருகிறேன். வைரமுத்து பாலியல் குற்றவாளி. அதனால், அவரை எப்போதும் நான் எதிர்த்துக்கொண்டே இருப்பேன்.

வைரமுத்து என்னிடம் மன்னிப்பு கேட்ட ஆடியோ ஆதாரம் உள்ளது. வைரமுத்து மற்ற பெண்களிடமும் இதுபோல் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், இதுவரை அவர் பொதுவெளியில் வெளிப்படையாக யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுதான் எங்களுக்கு வேண்டும். வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும். எனக்கு வேண்டாம். எனக்கு திறமை இருக்கிறது. நல்லாவே பிழைத்துக்கொள்வேன் என்றார்.    

வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் அவர் நிவாரணம் கொடுக்க வேண்டும் - சின்மயி | Cinema