ரூ. 1000 உரிமைத் தொகை கிடைக்கலையா; மீண்டும் விண்ணப்பிக்கலாம் - இதோ முக்கிய அறிவிப்பு!
உரிமைத் தொகை விண்ணப்பிக்காத பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உரிமைத் தொகை
'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை' முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 1 கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு களஆய்வு நடத்தப்பட்டது. அதன்பின், தகுதிவாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டனர். அதனையடுத்து, 9 லட்சத்து 24 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்தனர்.
விண்ணப்பிக்க வாய்ப்பு
அதனையும், வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு செய்தனர். தற்போது, இதுவரை விண்ணப்பிக்காத பயனாளிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும்.
எந்த ஒரு தகுதியான பயனாளியின் வாய்ப்பும் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் கீழ் அரசு மிக கவனமாக செயல்பட்டு வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.