மகளிருக்கு ரூ.1000; இன்னும் விண்ணப்பிக்கலயா? அப்போ இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
உரிமைத் தொகை விண்ணப்பிக்காதவர்களுக்கான தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை ஜூலை மாதம் தொடங்கப்பட்டு முதல் கட்ட முகாம் ஆகஸ்டு 4 ஆம் தேதி நிறைவடைந்தது.
அதில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் தொடங்கியது.
விண்ணப்பங்கள்
இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், 2 முகாம்களிலும் விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் சிறப்பு முகாம்கள் தொடங்க உள்ளன. ஆகஸ்டு 18, 19, 20 ஆகிய நாட்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
அதில் விண்ணபிக்கலாம். விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதியான பெண்கள்,
ஏற்கனவே நடைபெற்ற 2 முகாம்களில் வருகை தர இயலாத குடும்பத் தலைவிகள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.