ரூ.1000 உரிமைத் தொகை; மெசேஜால் குழப்பமடைந்த பெண்கள் - முக்கிய தகவல்!
மகளிர் உரிமை திட்டத்தில் மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
உரிமைத் தொகை
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 14ம் தேதி மகளிர் உரிமைத் தொகை பெண்களில் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
1.70 கோடி பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். தற்போது வரை இந்த திட்டத்திற்கு 1.064 கோடி பேர் இந்த திட்டத்தில் தேர்வாகி உள்ளனர். மேலும் 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மோசடி அம்பலம்
இதில், தகுதியானவர்களுக்கு நவ.25 முதல் எஸ்.எம்.எஸ் அனுப்பபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் சாயா பட்டரை தெருவில் உள்ள பல பெண்களின் ஆதார் மற்றும் பான் விவரங்களைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு நடந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த பெண்களின் விவரங்களை பயன்படுத்தி போலியான ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி அதை வைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த பெண்கள் ஜிஎஸ்டி செலுத்தியதால் கலைஞர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தபோது இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.