மேல்முறையீடு செஞ்சீங்களா..? இன்னும் இவளோ பேருக்கு மகளிர் உரிமை தொகை உண்டு..! உதயநிதி அதிரடி!!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நற்செய்தியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உரிமைத் தொகை
தமிழ்நாடு அரசு சார்பில் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பயனாளர்களின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதில், பல அறிவுறுத்தல்களை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும், பல பயனாளர்கள் தங்களுக்கு தகுதி இருந்தும் இந்த திட்டத்தில் தாங்கள் சேர்க்கப்படவில்லை என புகார் அளித்த நிலையில், மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது.
அதில், தற்போது புதிய தகவல் ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு, நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 ரூபாய் என்றும் இந்த திட்டத்தில் புதிதாக 7 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.