பெண்களுக்கு ரூ.1000; மேல்முறையீடு பண்ணியிருக்கீங்களா? இதோ முக்கிய தகவல்!

Tamil nadu DMK
By Sumathi Nov 09, 2023 03:27 AM GMT
Report

மேல்முறையீடு செய்தவர்களுக்கு உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி தொடங்கியுள்ளது.

மேல்முறையீடு

பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌. வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12.000/- உரிமைத்தொகை வழங்கும்‌ கலைஞர்‌ மகளிர்‌ உரிமைத்‌ திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

magalir-urimai-thogai

அதன்படி, தகுதியான பயனாளிகளைக்‌ கண்டறிவதற்கான விதிமுறைகள்‌ வகுக்கப்பட்டு, 1.63 கோடி விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, விசாரணைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 - நிராகரிக்கப்பட்டுள்ளதா? பணம் வரவில்லையென்றால் என்ன செய்வது?

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 - நிராகரிக்கப்பட்டுள்ளதா? பணம் வரவில்லையென்றால் என்ன செய்வது?

வரவு பணி

அதில், 1.06 கோடி தகுதியான பயனாளிகள்‌ தெரிவு செய்யப்பட்டு, தலா ரூபாய்‌ 1000/- வீதம்‌ முதல்‌ தவணையாக மொத்தம்‌ ரூபாய்‌ 10,65.21,98,000/- அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கின்‌ வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இதில் நிராகரிக்கப்பட்ட 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

பெண்களுக்கு ரூ.1000; மேல்முறையீடு பண்ணியிருக்கீங்களா? இதோ முக்கிய தகவல்! | Magalir Urimai Thogai Crediting Begins Details

இதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி, நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவர்களுக்கான உரிமைத்தொகை வரவு வைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த 2ஆம் கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.