ரூ.1000 பெற தேவையான தகுதிகள் என்னென்ன? இன்னும் வரவில்லையா - என்ன செய்யவேண்டாம்!
மகளிர் உரிமைத் தொகை பெற தேவையான தகுதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்.
மகளிர் உரிமைத் தொகை
மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த 2025-25 ஆம் ஆண்டில் 13,087 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான தகுதிகளும், பொருளாதாரத் தகுதிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். ( செப்டம்பர் 15, 2002 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்)
தகுதிகள்
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள். ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
ஆண்டிற்கு விட்டு உபயோகத்திற்கு 3000 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் ஆகியவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவார்.