அந்தரத்தில் தொங்கிய பெண்கள்..பூங்கா திறந்து 5 நாட்களில் ஜிப்லைன் பழுதா? EPS ஷாக்!

M K Stalin M Karunanidhi Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Oct 13, 2024 07:56 AM GMT
Report

பிரபல ஜிப்லைன் ரோப் காரில் பொதுமக்கள் உற்சாகத்துடன் பயணித்து கொண்டிருந்தனர்

 திமுக அரசு

கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறந்து 5 நாட்களில் ஜிப்லைன் பழுதாகியுள்ளது. மக்களின் உயிரோடு தி.மு.க. அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

edappadi palanisamy

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,’’விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து,

இது கூட கொடுக்க மாட்டீங்களா? சீர்கெடச் செய்த விடியா திமுக அரசு - எடப்பாடி கண்டனம்

இது கூட கொடுக்க மாட்டீங்களா? சீர்கெடச் செய்த விடியா திமுக அரசு - எடப்பாடி கண்டனம்

பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

எடப்பாடி பழனிசாமி

திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது.

kalaignar park

தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். என்று தெரிவிதுள்ளார்.