இன்னும் பல அமைச்சர்கள் கைதாவர்கள் - எடப்பாடி பழனிசாமி அதிரடி..!!
அமைச்சர் பொன்முடிக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பொன்முடி வழக்கு
அமைச்சர் பொன்முடிக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
இந்நிலையில், தான் அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு குறைஞ்சபட்ச தண்டனையை வழங்கப்படவேண்டும் என பொன்முடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தண்டனை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி விமர்சனம்
மேலும், 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும் போது, திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறி, 2 1/2 ஆண்டுகளில் திமுகவினர் ஊழல் மட்டுமே செய்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.