முத்தக்காட்சிக்கு மட்டும் தயங்காமல் பலமுறை ஒத்திகை பார்த்த கஜோல் - கிழிக்கும் ரசிகர்கள்!
பிரபல நடிகையான கஜோல் முத்தக்காட்சிகளுக்கு மட்டும் பலமுறை ஒத்திகை பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை
பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை கஜோல். இவர் ஹிந்தி, தமிழ் மொழியில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தமிழில் மின்சார கனவு என்று படத்தில் நடித்ததன்மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகினார். வெகு நாட்கள் கழித்து வெப் தொடரில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
முத்தக்காட்சிகள்
இந்நிலையில், இவர் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் வெளியான சமையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ட்ரையல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர், தி குட் வைஃப் என்ற அமெரிக்க தொடரின் ரீமேக்காகும், இதில் கஜோலின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வெப் தொடரில் ஒரு முத்தக்காட்சியில் கஜோல் நடித்துள்ளது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்த வயதில் இந்த முத்தக்காட்சி தேவையா என பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் வலம் வருகிறது. இது குறித்து சக நடிகரான ஆலி அளித்துள்ள பேட்டியில், "ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் இந்த காட்சி படமாக்கப்பட்டது. முக்கியமான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பில் இருந்தனர்.
இந்த காட்சியை படமாக்கும் போது, கஜோலுக்கு எந்தவிதமான வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இல்லை. அவர்கள் அந்தக் காட்சியை எடுக்கும் முன் இரண்டு முறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் நடித்தார்கள்" என்று கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் சபேஸ்வரனின் மறைவு ஈழத் தமிழர் ஊடகத் துறைக்குப் பேரழிப்பு - சிறீதரன் எம்.பி! IBC Tamil