முதல் முத்தக்காட்சி; டெட்டால் ஊற்றி வாயை கழுவினேன் - பிரபல நடிகை வேதனை
முதல் முத்தக்காட்சி முடிந்ததும் டெட்டால் மூலம் வாயை சுத்தம் செய்ததாக நடிகை நீனா குப்தா தெரிவித்துள்ளார்.
நடிகை நீனா குப்தா
பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தா(63). 2018ம் ஆண்டு வெளியான பதாய் ஹோ படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன்பின் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பல இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். 20வது வயதில் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
அது ஒர்க்அவுட் ஆகவில்லை. அதனால் ஓராண்டுக்குள் பிரிந்துவிட்டனர். அதன்பின், கிரிக்கெட் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸுடன் தொடர்பு ஏற்பட்டது. அதில் அவர் கர்ப்பமானார். விவியன் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் குழந்தையை தான் தனியாக வளர்ப்பதாக முடிவெடுத்தார். அந்த குழந்தை தான் மசாபா குப்தா.
முத்தக்காட்சி
இந்நிலையில் தன் அனுபவம் குறித்து பேசியுள்ள நீனா, ஒரு நடிகராக நீங்கள் எல்லா வகையான காட்சிகளையும் செய்ய வேண்டும், பல வருடங்களுக்கு முன்பு, நான் திலீப் தவானுடன் ஒரு சீரியல் செய்தேன். இது இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலில் உதட்டோடு உதடு சேர்க்கும் லிப்லாக் முத்தக் காட்சியைக் கொண்டிருந்தது.
என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் அந்த காட்சிக்கு தயாராக இல்லை.
நான் முத்தமிடும் காட்சியில் பதட்டமடைந்தேன். அது முடிந்தவுடன், டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.