அப்படி காட்சிகளில் நடிப்பது எப்படி இருக்கும் தெரியுமா? நடிகை கஜோல் ஷாக் தகவல்
நடிகை கஜோல் ஷூட்டிங்கில் மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகை கஜோல்
90 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். ‘மின்சார கனவு’ படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சாமியுடன் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின், ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் வில்லியாக ரீ-எண்ட்ரி கொடுத்தார். தற்போது, வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில்,
molestatation
“படங்களில் உடல் ரீதியாக மொலெஸ்ட செய்யப்படும் காட்சிகளில் நடிக்கவேமாட்டேன். நம்மை ஒருவர் அவ்வாறு தொடும் போது நாம் நடிகை என்ற எண்ணம் ஒருஅளவுக்கு தான் இருக்கும், எனக்கு மிகவும் uncomfortable ஆக இருக்கும். Physical abuse அல்லது molestatation காட்சிகளில் நடிப்பது மிகவும் மோசமாக அருவருப்பாக எனக்கு தோன்றும்.

இப்படிப்பட்ட காட்சிகளில் நானும் நடித்து இருக்கிறேன். ஆனால் அது ரொம்ப மோசமான அனுபவத்தை மட்டுமே எனக்கு கொடுத்திருக்கிறது.
ஒரு நல்ல நடிகர் என்பதை இந்த மாதிரி காட்சிகளில் நடித்துதான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, வேறு 100 வழிகளில் அதை நிரூபிக்கலாம். அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    