சாண்டியை வாழ விடுங்க; எதற்கெடுத்தாலும் ஏன்? கொந்தளித்த 2வது திருமணம் செய்த காஜல்!

Tamil Cinema
By Sumathi Dec 30, 2023 08:07 AM GMT
Report

சாண்டி மாஸ்டர் குறித்து முன்னாள் மனைவி காஜல் பசுபதி பேசியுள்ளார்.

காஜல் பசுபதி

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை காஜல் பசுபதி.

kajal pasupathi and sandy

தொடர்ந்து, பல சிறு வேடங்களில் நடித்து வந்தார். 2008ல் பிரபல நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 2012ல் விவாகரத்து பெற்றனர்.

சான்ஸ் கேட்டதும்... நண்பனே அப்படி பேசினான் - பிரபல நடிகை வேதனை!

சான்ஸ் கேட்டதும்... நண்பனே அப்படி பேசினான் - பிரபல நடிகை வேதனை!

2வது திருமணம்

அதன்பின் சாண்டி 2வது திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளது. தனியாக வசித்து வந்த காஜல் பசுபதி அண்மையில், தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, சாண்டி மாஸ்டரை காஜலுடன் இணைத்து பல செய்திகள் வெளியானது.

kajal post

இதனைப் பார்த்த காஜல், தனக்கும் சாண்டி மாஸ்டருக்கு விவாகரத்து ஆகிவிட்டது, ஏன் அதன் பிறகும் அவருடைய புகைப்படங்களை இணைத்து என்னைப் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றீர்கள். அவனை வாழ விடுங்கள் என்று கூறி தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.